மாவீரன் பூலித்தேவரின் வீரம் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது : பிரதமர் மோடி

BJP Narendra Modi
By Irumporai Sep 01, 2022 05:22 AM GMT
Report

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் வீரரின் தியாகம் மக்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மாவீரன் பூலித்தேவரின் வீரம் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது : பிரதமர் மோடி | Pm Modis Determination Of Hero Bhulidevar

பூலித்தேவன்

19ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடைபெற்ற சிப்பாய்களின் புரட்சியை, இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று கூறினாலும். ஆனால் அதற்கு முன்பே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து, அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து,1755ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கிலேயர்களின் வரி வசூலை, ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு தமிழ் மன்னன்தான் பூலித்தேவன் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

விழாவையொட்டி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நினைவு மாளிகையில் உள்ள பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்

இந்த நிலையில் பிரதமர் மோடி பூலித்தேவன் "மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர்.

மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்" என்று பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , சுதந்திரத்திற்காகப் போராடிய மாமன்னர் பூலித்தேவரின் பிறந்த தினமான இன்று அவரின் நினைவைப் போற்றிய நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தமிழக பாஜக சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தந்தது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.