52வது பிறந்தநாள்: முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

அவர் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜோசப் விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளை திங்கள்கிழமை (ஜூன் 22) கொண்டாடி வருகிறார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், மாநிலம் முழுவதும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கான முன்னோட்டமாக ஞாயிற்றுக்கிழமையே பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்னதானம், ரத்ததான முகாம்கள், உடல் தானப் பதிவு முகாம்கள் உள்ளிட்ட சமூக நலப் பணிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil