பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார் – அண்ணாமலை

BJP Narendra Modi K. Annamalai
By Thahir Oct 16, 2023 09:31 PM GMT
Report

பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

3 ஆம்  கட்ட பாதயாத்திரை 

பாஜக மாநில தமிழகம் முழுவதும் பாத யாத்திரை சென்று வருகிறார். அவரின் 3 ஆம் கட்ட பாத யாத்திரையை அவிநாசியில் தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

PM Modi will not lie - Annamalai

“அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சமீபத்தில் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்துகளுக்கு பாதுகாப்பில்லாத மற்றும் சிலை திருட்டை வேடிக்கை பார்க்கும் அரசாக திமுக உள்ளது. அரசின் அறிக்கையின் படி 1992-2017 வரை காணாமல் போன சிலைகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல்.

மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து அங்கம் வகித்த திமுக எத்தனை சிலைகளை மீட்டு வந்துள்ளது? மோடி பதவியேற்ற பின் 361 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளாக ஒவ்வொரு நாட்டுடனும் போராடி பிரதமர் மோடி சிலையை மீட்டு வருகிறார்.

பிரதமர் பொய் சொல்ல மாட்டார் 

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. அறநிலையத்துறைதான் தமிழகத்தின் நம்பர் 1 திருடன்.

PM Modi will not lie - Annamalai

அதைத்தான் தெலுங்கானாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது என்று கூறினார். பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார்” என்று கூறினார்.