புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டது

BJP Narendra Modi
By Irumporai May 28, 2023 03:09 AM GMT
Report

பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

 நாடாளுமன்ற கட்டிடம்

இன்று பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது. இதில் முக்கியமாக லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் வைக்கப்பட இருக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை மத பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகில் செங்கோல் வைக்கப்படுகிறது. இந்த செங்கோலுக்கு வரவேற்பு இருந்தாலும், எதிர்ப்புகளும் இருந்து வருகிறது. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழாவை புறக்கணிக்க 20 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா : தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்டது | Pm Modi Will Inaugurate The New Parliament Today

75 ரூபாய் நாணயம்

இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், சிறப்பு வாய்ந்த 75 ரூபாய் நாணயத்தை நிதி அமைச்சகம் வெளியிட உள்ளது. இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்த நினைவு நாணயம் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்படுகிறது.

 தமிழ்நாட்டின் செங்கோல்

இந்த நிலையில் தமிழ் நாட்டின் பாரம்பரிய செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. அதே சமயம் நாடாளுமன்ற கல் வெட்டினை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.