ஜனவரி 2ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - எதற்காக..?

Tamil nadu Narendra Modi trichy
By Jiyath Dec 24, 2023 07:38 AM GMT
Report

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி, வரும் ஜனவரி 2ம் தேதி தமிழகம் வருகிறார்.

புதிய முனையம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. முன்புறம் கோவில் தோற்றத்திலும்.. பின் புறம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்திலும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 2ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - எதற்காக..? | Pm Modi Vistis Tamilnadu Trichy Airport

இந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 4,000 சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் இதில் கையாள முடியும். புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வருகை 

புதிய முனையத்தில், முகப்பில் பார்ப்போர் கண்களைக் கவரும் வகையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மாதிரி, தமிழக கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ஜனவரி 2ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - எதற்காக..? | Pm Modi Vistis Tamilnadu Trichy Airport

இதுமட்டுமின்றி ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி, வரும் ஜனவரி 2ம் தேதி தமிழகம் வருகிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு வசதிகள் குறித்து மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று ஆய்வு செய்தார்.