மோடி வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து கட்டுப்பாடு – காவல்துறை அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை வணிக மற்றும் கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையின் அறிவிப்பின்படி, முக்கிய சாலைகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்படும்.

போக்குவரத்து கட்டுப்பாடு
ஜிஎஸ்டி சாலை: தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பிலும், பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஹோட்டல் ஏர்வே அருகிலும் திருப்பிவிடப்படும்.
ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை: கோயம்பேடு, அசோக் நகர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்படும்.
பூந்தமல்லி சாலை: கத்திபாரா நோக்கி வரும் வாகனங்கள் போரூர் சுங்கச்சாவடியில் மதுரவாயல் நோக்கித் திருப்பிவிடப்படும்.
OMR மற்றும் சர்தார் படேல் சாலை: வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பு வழியாக மாற்றிவிடப்படும்.
வேளச்சேரி பிரதான சாலை: சர்தார் படேல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் குருநானக் சந்திப்பில் திருப்பிவிடப்படும்.
அண்ணா சாலை: வாகனங்கள் MC ராஜா யூ-டர்ன் பகுதியில் திருப்பிவிடப்பட்டு, இலக்குகளை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படும்.
அதன் பிரகாரம் , வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றங்களைக் கவனித்து, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.