மோடி சென்னை பயணம்; 2 நாள் திட்டம் - காரணம் இதுதான்!

Narendra Modi Chennai
By Sumathi Apr 07, 2023 03:58 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடி 2நாள் பயணமாக நாளை சென்னை வரவுள்ளார்.

பிரதமர் மோடி

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தனி விமானம் மூலம் மதியம் 3 மணியளவில் வரும் பிரதமர், சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தைத் திறந்து வைக்கிறார். தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

மோடி சென்னை பயணம்; 2 நாள் திட்டம் - காரணம் இதுதான்! | Pm Modi Visit Chennai Airport On Saturday

அதன்பின், மாலை 4 மணியளவில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலையும், தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார்.

2 நாள் பயணம்

தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்று, சென்னை பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதனையடுத்து, 9-ம் தேதி காலை மைசூர் சென்று ந்திப்பூர் சரணாலயத்தைப் பார்வையிட்டுவிட்டு, ஹெலிகாப்டர் மூலம், நீலகிரி மாவட்டம், முதுமலை வருகிறார். தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று ஆஸ்கர் விருதுவென்ற ஆவணப் படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்திக்கவுள்ளார்.