மதரீதியாக சர்ச்சை பேச்சு - பிரதமர் மோடியை எதிர்த்து மம்தா தேர்தல் கமிஷனில் புகார்!
பிரச்சாரத்தில் பிரதமர் மோடிமதரீதியாக பேசி வாக்கு சேகரிப்பதாக அவர் மீது மம்தா புகாரளித்துள்ளார்.
பிரதமர் மோடி
அண்மையில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வாக்கி சேகரித்தார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மதம் குறித்து பேசி ஓட்டு கேட்டிருந்ததாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
பிரச்சாரத்தின் போது மோடி, "இந்து மதத்தினர் நம்பிக்கை வைத்துவழிபட்டு வரும் சக்தியை அழிக்க வேண்டும்'' என்கின்றனர். தமிழக மக்கள் ஓம் சக்தியாக, மகா மாரியம்மனை வழிபடுகின்றனர்.
சர்ச்சை பேச்சு
தமிழகத்தில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என சக்தி ஆலயங்கள் உள்ளன. சக்தியை பெண் உருவில் நாம் வணங்குகிறோம். இத்தகு சக்தியை வீழ்த்துவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியாது.
இந்து தர்மத்தின் வழிபாடான சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள்" இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னதாக, பிரசாரங்களில் மதத்தின் பெயரில் வாக்குகள் சேகரிக்க கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையர் தெளிவாக விளக்கியிருந்தார். ஆனால், பிரதமர் அதை கடைபிடிக்கபவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் புகார் அளித்திருக்கிறது.
மம்தா புகார்
அந்த புகாரில், "சேலத்தில் மோடி பேசியது மேற்கு வங்கம் உட்பல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒளிபரப்பாகியது. அதில். 'இந்தியா கூட்டணி மீண்டும் மீண்டும் இந்து மதத்தை அவமதிக்கிறது.
அவர்கள் இந்து மதத்திற்கு எதிரான எண்ணங்களை விதைக்கிறார்கள். பிற மதங்களுக்கு எதிராக பேசுவதில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு நொடி கூட வீணடிக்காமல் இந்து மதத்தை அவமதிக்கிறார்கள்.
இதை எப்படி பொறுத்துக் கொள்வது? இதை எப்படி அனுமதிப்பது?' என்று பேசியிருந்தார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 123 (3)ன் கீழ், மதத்தின் அடிப்படையில் தேர்தல்களின் போது வாக்குகளைக் சேகரிப்பது ஒரு 'ஊழல் நடைமுறை' என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே நரேந்திர மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இளைஞன் மீது தாக்குதல் : தப்பிச் சென்ற டீச்சர் அம்மாவை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள் IBC Tamil
