சென்னை வருகிறேன் மக்களே...தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி..!

Tamil nadu Narendra Modi Chennai
By Thahir Apr 08, 2023 05:21 AM GMT
Report

சென்னை வருவதாக பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இன்று சென்னை வருகிறார் பிரதமர் 

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலில் அவர் சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்படடுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர் அவர் ஹெலிகாப்டரில் போர் நினைவு சின்னம் அருகே உள்ள அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் செல்கிறார்.

அங்கிருந்து காரில் சென்னை சென்டரல் ரயில் நிலையம் செல்கிறார்.அங்கு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து காரில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் சென்று ராமகிருஷ்ணா மடம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை வருகிறேன் மக்களே...தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி..! | Pm Modi Tweeted In Tamil

பிரதமர் மோடி வருகையை அடுத்து சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 22 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி ட்வீட் 

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில், விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது.

தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்.’ என பதிவிட்டுள்ளார்.