புல்வாமா தாக்குதல் : உயிர் தியாகத்தை ஒருபோதும் மறக்கமாட்டோம் - பிரதமர் மோடி

BJP Narendra Modi
By Irumporai Feb 14, 2023 06:16 AM GMT
Report

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீசார் 1000க்கும் மேற்பட்டோர் பேருந்துகளில் சென்று கொண்டிருந்தனர். 

புல்வாமா தாக்குதல்

அப்போது எதிர்திசையில் வெடிகுண்டுகள் நிரம்பிய காரில் வந்த பயங்கரவாதிகள், மத்திய ரிசர்வ் போலீசார் வந்த பேருந்தின் மீது அதிவேகமாக மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணமடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்கொலை தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக அறிவித்தது 

நாம் மறக்க மாட்டோம்

இந்நிலையில், வீரமரணமடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், இந்த நாளில் புல்வாமாவில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்வோம்.

வீரர்களின் உயிர் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். வீரர்களின் தைரியம் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது' என தெரிவித்துள்ளார்.