சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி!
சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி
மோடி முதலிடம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு அண்மையில் டெல்லியில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகித்தது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் உலக தலைவர் கலந்து கொண்டு தற்போது நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். 76 சதவீதம் பேரின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
மற்ற இடங்கள்
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் அதிபர் அலைன் பெர்செட். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த பட்டியலில் 40 சதவீத ஆதரவுடன் 7ம் இடம் பிடித்துள்ளார்.
ஆனால் தென் கொரிய அதிபர் யூன் சியோக் யூல் மற்றும் செக் குடியரசு தலைவர் பீட்ர் பாவெல் ஆகியோருக்கு குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.