அதிகாரமிக்க தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம், 2-வது இடத்தில் அமித் ஷா!

amitshah mostpowerfulleader moditops
By Swetha Subash Apr 01, 2022 07:12 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இந்தியாவின் அதிகாரமிக்க 100 பிரமுகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

அதிகாரமிக்க தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம், 2-வது இடத்தில் அமித் ஷா! | Pm Modi Tops The List Of Most Powerful Personality

கொரோனா பரவல், 3 புதிய வேளாண் சட்டங்கள் போன்ற சில காரணங்களால் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வென்று அதை அனைத்தையும் முறியடித்தது.

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்டது, கொரோனா தடுப்பூசியை பரவலாக கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் மோடியின் செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளதாக அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரமிக்க தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம், 2-வது இடத்தில் அமித் ஷா! | Pm Modi Tops The List Of Most Powerful Personality

பிரதமர் மோடியை தொடர்ந்து 2-வது இடத்தில் அமித் ஷா இடம் பிடித்துள்ளார்.

மேலும் 3-வது இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தும் 4-வது இடத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும், 5-வது இடத்தில் முகேஷ் அம்பானியும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.