ரஷ்ய அதிபருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி?

russiaukraineconflict pmmodiputin moditalkswithputin
By Swetha Subash Mar 07, 2022 07:58 AM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 12-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள இந்த போர் 21-ம் நூற்றாண்டில் இதுவரை எந்த உலக நாடுகலும் கண்டிராத போராக மாறி வருகிறது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கி வரும் ரஷ்ய படைகள் ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள்,

மருத்துவமனைகள், பள்ளிகள், வணிக வளாகங்கள் என தாக்குதலை விரிவுபடுத்தி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை தேடிக்கொண்டது.

ரஷ்ய அதிபருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி? | Pm Modi To Talk With Vladimir Putin On War Crisis

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச உள்ள பிரதமர் மோடி உக்ரைனில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும்,

போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.