பிரதமர் மோடி மிரட்டி பார்க்கிறார் - எனக்கு ஒரு ரெய்டு விடுங்களே..!

Naam tamilar kachchi Seeman Erode
By Thahir Feb 15, 2023 05:36 AM GMT
Report

பிபிசி ஆவணப்படம் எடுத்ததற்காக அந்த அலுவலகத்தில் ரெய்டு நடத்துகிறார்கள். பிரதமர் மோடி மிரட்டி பார்க்கிறார். நானும் தான் பேசுறேன், எனக்கு ஒரு ரெய்டு விடுங்களேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேனாவை உடைப்பேன் 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நிறைவாக இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது சீமான் பேசுகையில்," பேனாவைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது எப்படி பட்ட பேனா தெரியுமா? என்று புகழ்கிறார்கள்.

PM Modi threatens - Give me a raid

நான் அதை, எப்படிப்பட்ட பேனா என்பதை அடுக்கி பேசினேன் என்றால், வெளியில் தலைகாட்ட முடியாது. அது கொஞ்ச நஞ்ச கொடுமை செய்த பேனா இல்லை, பார்த்து பேசணும். உடைப்பீயா சீமான்? என்றால், ஆமாம் உடைப்பேன்.

இதையே ஓயாமல் கேட்டால், மண்டையை உடைப்பேன். நீங்கள் அதிகாரத் திமிறில் ஆட்டத்தைப் போட்டுப் பேனாவை வைத்தால், என் அதிகாரம் எனக்கு வரும். அப்போது எந்த அடையாளமும் இங்கே இருக்காது. பெயர்த்து எறிந்து விடுவேன்.

எனக்கு ஒரு ரெய்டு விடுங்கள் 

2024 நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் நிற்கும். இதுக்கு மேலும் நீங்கள் ஏமாந்தால் எதுவும் செய்ய முடியாது.

திமுகவிற்கு போட்டேன், அதிமுகவிற்கு போட்டேன் என எங்களைத் தூக்கி நடுத்தெருவில் போடுகிறீர்கள். இப்படி முச்சந்தியில் இருந்து கத்திட்டே போக முடியாது.

PM Modi threatens - Give me a raid

இனிமேல் யாராவது போராட்டம் என்று என்னை அழைத்தால், விழுந்து படுத்துக்குவேன். எவன் பிரச்சினையைத் தருகிறானோ, அவனுக்கே அதிகாரத்தையும் வலிமையும் தருவேன் என்றால்,

இது என்ன மாதிரியான மண்? இதுக்கு எதுக்கு கல்வி? எதுக்கு மூளை என்கிற உறுப்பு? அறிவு இருக்கா இல்லையா? பிபிசி ஆவணப்படம் எடுத்ததற்காக அந்த அலுவலகத்தில் ரெய்டு நடத்துகிறார்கள். பிரதமர் மோடி மிரட்டி பார்க்கிறார். நானும் தான் பேசுறேன். எனக்கு ஒரு ரெய்டு விடுங்களேன்" என்று பேசினார்.