‘’கை தட்டியதை கேலி செய்தவர்களுக்கு இப்ப பதில் கிடைத்திருக்கும்’’ - பிரதமர் மோடி

தடுப்பூசி சாதனையின் மூலம் நம் மீதான விமர்சனங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி டெல்லியிலிருந்து நாட்டு மக்களிடமும் உரையாற்றி வருகிறார். 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அதில், 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனை நாட்டு மக்கள் 130 கோடி பேரையும் சேரும். கடைக்கோடி மக்களுக்கும் வேக்சின் செல்வதை உறுதி செய்துள்ளோம்.

கொரோனா காலத்தில் மக்களிடம் நம்பிக்கை அளிப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். வேக்சின் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினோம்.

இந்தியாவின் வேக்சின் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது. அறிவியல் முறைப்படி செயல்பட்டு மக்களுக்கு வேக்சினை கொண்டு சென்றோம்.

தடுப்பூசி சாதனையின் மூலம் நம் மீதான விமர்சனங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்த தேசம் என்ற நிலைமாறி, சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் தேசம் என்ற நிலை உருவாகி இருப்பது மாபெரும் சாதனை. வளர்ந்த நாடுகளால் கூட படைக்க முடியாத சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. விளக்கு ஏற்றுவது , கை தட்டி ஒலி எழுப்புவது எப்படி பயனளிக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த முயற்சிகள் மருத்துவத்துறைக்கு உற்சாகத்தை அளித்தது. இன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவருக்கும் புது உற்சாகம் அளிக்கும் நாளாக மாறி உள்ளது.

முகக்கவசம் நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. வரக்கூடிய பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் முழுமையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

புதிய முதலீடுகள் மட்டுமல்லாமல் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பலனடைந்து வருகின்றனர். கோவின் இணையதளம் தடுப்பூசி திட்டத்தை மக்களிடம் மிக எளிதாக கொண்டு சேர்த்தது. கொரோனா குறித்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த சாதனை பதிலளித்துள்ளது.

உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோரில் 30% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு விட்டது.

தடுப்பூசி செலுத்துவதில் எந்த விஐபிக்களுக்கும் முன்னுரிமை வழங்கவில்லை; விஐபி கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம். கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் எந்த ஒரு பாகுபாடும் இல்லை

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்