அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி : வெளியான முக்கியத்தகவல்

Narendra Modi
By Irumporai Jun 06, 2023 03:30 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக செல்ல இருக்கும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிரதமர் மோடி உரை

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஏற்கனவே பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில் தற்போது உரையாற்றுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி : வெளியான முக்கியத்தகவல் | Pm Modi Speech In Usa Parliament

  அமெரிக்காவில் இரண்டாவது முறையாக

இதற்கு முன் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வாஜ்பாய், நரசிம்மராவ், ராஜீவ் காந்தி ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்திய நிலையில் தற்போது பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டத்தில் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, இந்திய அமெரிக்க நாடுகள் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.