2040க்குள் சந்திரனில் இதை பண்ணியே ஆகனும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு!

Narendra Modi
By Sumathi Oct 18, 2023 06:11 AM GMT
Report

விஞ்ஞானிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளை பிரதமர் வழங்கியுள்ளார்.

 பிரதமர் மோடி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள நிலையில், இதற்கான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக உள்ளது. மேலும், 3 ஆளில்லா விண்கலம் அனுப்புவது உட்பட சுமார் 20 முக்கிய சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

2040க்குள் சந்திரனில் இதை பண்ணியே ஆகனும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு! | Pm Modi Scientists India Man To Moon By 2040

இந்நிலையில், இந்த ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. இந்தியா வந்தவுடன் இஸ்ரோ மையத்திற்கு ஓடிய பிரதமர் மோடி!

என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. இந்தியா வந்தவுடன் இஸ்ரோ மையத்திற்கு ஓடிய பிரதமர் மோடி!

மோடி வலியுறுத்தல்

அப்போது பேசிய பிரதமர், “2035க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைப்பது மற்றும் 2040க்குள் சந்திரனுக்கு முதல் இந்தியரை அனுப்புவது உள்ளிட்ட புதிய மற்றும் லட்சிய இலக்குகளை இந்தியா இப்போது இலக்காகக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

2040க்குள் சந்திரனில் இதை பண்ணியே ஆகனும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி திடீர் உத்தரவு! | Pm Modi Scientists India Man To Moon By 2040

தொடர்ந்து, வெள்ளி மற்றும் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையேயான பயணத் திட்டங்களை மனதில் கொண்டு பணியாற்றுமாறு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.