அரசுகள் மாறினாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியே என் இலக்கு - பிரதமர் மோடி

Tamil nadu Narendra Modi India C Joseph Vijay
By Vinoja Oct 11, 2026 11:03 AM GMT
Report

தமிழகத்தில் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகச் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, போரூர் – பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்து பயணம் மேற்கொண்டார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், பாரம்பரியமும் நவீனத்துவமும் இணைந்த வளர்ச்சிப் பாதையே வலிமையான, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளா்.

அரசுகள் மாறினாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியே என் இலக்கு - பிரதமர் மோடி | Pm Modi Says Tamil Nadus Development His Priority

மேலும், தான் குஜராத் முதலமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் பணியாற்றிய காலங்களில் தமிழகத்தின் பல்வேறு முதலமைச்சர்களுடன் இணைந்து செயல்பட்டதை நினைவுகூர்ந்தார்.

“தமிழ்நாட்டில் அரசுகள் மாறினாலும், மாநிலத்தின் வளர்ச்சியே எப்போதும் எனது பிரதான சிந்தனையாக இருந்து வருகிறது.

தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜயுடனும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்” என்றும் பிரதமர் மோடி இதன்போது குறிப்பிட்டார்.