இந்த முறை அண்ணன் என்னை கூப்பிடுவார் : பிரதமரை காண காத்திருக்கும் சகோதரி
பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சகோதரி கமர் மொஹ்சின் ஷேக், ரக்ஷா பந்தனை முன்னிட்டு அவருக்கு ராக்கியை அனுப்பியுள்ளார்.
பிரதமருக்கு ராக்கி
மேலும் அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்தும், 2024 பொதுத் தேர்தலுக்கு வாழ்த்தும் தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார்.

ராக்கியை முன்னிட்டு தாம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், இந்த முறை மோடியை சந்திக்க எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் கமர் கூறினார்.
அண்ணன் அழைப்பார்
இந்த முறை அவர் என்னை டெல்லிக்கு அழைப்பார் என்று நம்புகிறேன். நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். எம்பிராய்டரி டிசைனுடன் கூடிய ரேஷ்மி ரிப்பனைப் பயன்படுத்தி நானே இந்த ராக்கியை உருவாக்கினேன்" என்று செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு கமர் மொஹ்சின் ஷேக் கூறியுள்ளார்.