இந்திய குடிமக்கள், வெளிநாடுகளில் அதை செய்யாதீர்கள்.. அது தேவையா? - பிரதமர் மோடி வேண்டுகோள்!

Narendra Modi Wedding India
By Jiyath Nov 27, 2023 02:32 AM GMT
Report

திருமணம் தொடர்பாக இந்திய குடிமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் 'பிரதமர் நரேந்திர மோடி' அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

இந்திய குடிமக்கள், வெளிநாடுகளில் அதை செய்யாதீர்கள்.. அது தேவையா? - பிரதமர் மோடி வேண்டுகோள்! | Pm Modi Requests Couples Not Hold Weddings Abroad

அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது "இந்தியர்கள சிலர் தங்களது திருமணங்களை வெளிநாடுகளில் வைக்கின்றனர். இது தேவைதானா? நமது நாட்டிலேயே திருமணத்தை வைத்துக் கொண்டால், இந்தியாவின் பணம் வெளியே எங்கும் செல்லாமல் நாட்டுக்குள்ளேயே இருக்கும்.

வேண்டுகோள் 

பொருளாதாரத்தை மேம்படுத்த அது உதவியாக இருக்கும். வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதேபோல்,

இந்திய குடிமக்கள், வெளிநாடுகளில் அதை செய்யாதீர்கள்.. அது தேவையா? - பிரதமர் மோடி வேண்டுகோள்! | Pm Modi Requests Couples Not Hold Weddings Abroad

திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும் போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனால் இந்திய சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என வணிக அமைப்புகள் கணித்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.