8 ஆண்டில் செய்யாததை இப்ப மட்டும் செய்வாரா என்ன? - மோடிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டென்மார்க் சென்றிருந்த நிலையில் அங்கு நடைபெற்ற சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக பிரான்ஸ் பயணத்தை முடித்து விட்டு டென்மார்க் சென்ற மோடி அங்கு அந்நாட்டின் ராணி மார்க்ரெத்தை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் பிரதமருக்கு டென்மார்க் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு தமது காரில் பயணிக்க வந்த மோடியிடம் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் திடீரென மைக்கை நீட்டினர்.
சார் எங்களை உள்ளே விடவில்லை அதனால்தான் என்று செய்தியாளர்கள் சொல்ல இதனை சற்றும் எதிர்பார்க்காத மோடி ' ஓ மை காட்' என்று ரியாக்ஷன் செய்தபடி, நான் போய் அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து நழுவினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின் நாடாளுமன்றத்திலும், பொது கூட்டங்களிலும் பேசுவதில் வல்லவராக திகழ்பவர், ஏனோ கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.