இன்ஸ்டாகிராமில் 100M.., புதிய சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளமான Instagram-ல் புதிய சாதனை படைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
2014ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த மோடி, தொடர்ந்து அந்த தளத்தில் செயலில் இருந்து வருகிறார்.
உலக நாடுகளின் தலைவர்களில் அதிக பின்தொடர்பவர்கள் அவருக்கே உள்ளனர்.
இந்த பட்டியலில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அடுத்ததாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளார்.
அதேபோல், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடனும் உள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்குக : அரசுக்கு இடித்துரைக்கும் ஐ.நா நிபுணர்கள் IBC Tamil
கிழக்கு ஆழ்கடலில் திடீர் சுகவீனம்: மூன்று கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் பத்திரமாக மீட்டு IBC Tamil