தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக வைக்க வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்

Narendra Modi India
By Irumporai Jul 31, 2022 09:10 AM GMT
Report

வரும் ஆகஸ்ட் 2 முதல் 15 வரை சமூக ஊடக கணக்குகளில் மூவர்ண தேசியக் கொடியை தங்கள் ப்ரொபைல் பிக்சராக வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமையன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி

தனது 'மன் கி பாத்' உரையில், 'ஹர் கர் திரங்கா' (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) என்ற இயக்கத்தை அவர் தொடங்கிவைத்துள்ளார். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுப்போம் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.  

சுதந்திரத்தை கொண்டாடும் நிகழ்ச்சிகளில் முக்கியமாக கவனம் செலுத்திய பிரதமர் மோடி, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று வருகின்றனர்.

தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக வைக்க வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள் | Pm Modi Profile Pic Suggestion Independence Day

தேசியக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் பிகைஜி ருஸ்தோம் காமா என்ற மேடம் காமா என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.1907 ஆம் ஆண்டின் அவரது பதிப்பில் மூன்று வண்ணங்களும் இருந்தன. பல கலாசார மற்றும் மத சின்னங்கள் தவிர, மையத்தில் 'வந்தே மாதரம்' என வடிவமைக்கப்பட்டிருந்தது.

தேசியக்கொடி வீடுகளில்

ஹர் கர் திரங்கா' பிரசாரத்திற்காக, மத்திய அரசு கொடி குறியீட்டையும் மாற்றி அமைத்துள்ளது. இப்போது, ​​பாலியஸ்டர், பருத்தி, கம்பளி, பட்டு மற்றும் காதி பந்தல் என அனைத்து வகையான பொருள்களை கொண்டும் கொடியை தயாரிக்கலாம

முன்பு இயந்திரம் மற்றும் பாலியஸ்டர் கொடிகள் அனுமதிக்கப்படவில்லை. கொடியின் அளவு மற்றும் அதன் காட்சி நேரம் ஆகியவற்றில் எந்த தடையும் இல்லை. முன்னதாக, சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே கொடியை பறக்கவிட அனுமதி இருந்தது.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, மூன்று நாட்களுக்கு 20 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் வீடுகளின் மேல் ஏற்றப்படவுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​நாம் அனைவரும் ஒரு புகழ்பெற்ற வரலாற்று தருணத்தைக் காணப் போகிறோம் என்றார்.