அனைவருக்கும் பலனளிக்கும் பட்ஜெட் - அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி புகழாரம்
நாடாளுமன்றத்தில் தாக்கலான பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழந்தார்.
பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு.
7.5% வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வரும் நிதியாண்டிலர் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்.
கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என அறிவிப்பு. தங்கம், வெள்ளி, வைரம், பித்தாளை, சிகரெட், ரப்பர், ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு.
சிகரெட் மீது விதிக்கப்படும் தேசிய பேரிடர் நிவாரண நிதி வரி 16% அதிகரிக்கப்படும். கிச்சன் சிம்னிகளுக்களுக்கான இறக்குமதி வரி 7.5% லிருந்து 15% ஆக உயர்வு என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.
புகையிலை பொருட்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படும் என அறிவிப்பு. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு டூரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ 9 லட்சமாக உயர்வு.
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்வு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிப்பு.
வருமான வரி விலக்கிற்கு உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவித்து இருந்தார்.
பிரதமர் மோடி புகழாரம்
இந்த நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைவருக்கும் பலனளிக்கும் பட்ஜெட்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் சிறப்பான பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பலன் தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு பட்ஜெட் மூலம் ஊக்கம் கிடைக்கும்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. கூட்டுறவுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு மூலம் கிராமப்புறங்களில் வேளாண்மை, சிறுதொழில் மேம்படும்.
சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் விவசாயிகள், பழங்குடியினர் பலன் பெறுவர்.
நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடைய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
புதிய முதலீடுகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.