செஸ் ஒலிம்பியாட் பேனர்களில் மோடியின் படங்களை ஒட்டிய பாஜகவினர் : வைரலாகும் வீடியோ

Chess Tamil nadu BJP Narendra Modi
By Irumporai Jul 27, 2022 08:53 AM GMT
Report

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளைமுதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பஸ்களும் இயக்கப்படுகின்றன.

நாளை முதல் செஸ் ஒலிம்பியாட்

இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட்  பேனர்களில் மோடியின் படங்களை ஒட்டிய பாஜகவினர் : வைரலாகும் வீடியோ | Pm Modi Pictures Chess Olympiad Advertising Banner

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விளம்பரம், போஸ்டர், பேனர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போஸ்டர்களில் பிரதமர் புகைப்படமோ அல்லது பெயரோ இடம்பெறவில்லை, இதை பாஜகவினர் கண்டித்து வந்தனர்.

பிரதமரின் புகைப்படத்தை ஒட்டிய பாஜகவினர்

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ள சென்னை அடையாறு உள்ளிட்ட இடங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அரசு விளம்பர சுவரொட்டியில் பிரதமர் மோடியின் படத்தை பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணித்தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒட்டினார்.

மேலும் சென்னையில் எல்லா இடங்களிலும் ஒலிம்பியாட் போஸ்டர்களிலும் மோடியின் படத்தை ஒட்ட வேண்டும் பாஜக நிர்வாகிகளுக்கு என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.