பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்
இந்திய திரையுலகின் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார்.
92 வயதான அவர் சுமார் 20 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக மும்பை ப்ரீச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் காலை 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி மும்பை சென்றார்.
இந்நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து IBC Tamil
