உக்ரைனில் மருத்துவம் படிக்க யார் காரணம் ? பிரதமர் குற்றச்சாட்டு!
modiwithstudents
pmmodiukrainestudents
By Swetha Subash
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது முந்தைய காங்கிரஸ் அரசை குற்றம் காட்டியுள்ளார். உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது உக்ரைனில் இருந்து மீட்டுவரப்பட்ட மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
முந்தைய அரசுகள் தான் மருத்துவ படிப்பிற்கான கொள்கை முறைகளை சரியாக செய்யவில்லை அதனால் தான் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயிலும் நிலை ஏற்பட்டது.
அந்த தவறுகளை சரி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறியுள்ளார்.