கோழைத்தனம், கொடூரச் செயல் - பிரதமர் மீதான தாக்குதலுக்கு மோடி கண்டனம்!

Narendra Modi Slovakia
By Sumathi May 16, 2024 06:52 AM GMT
Report

ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (59). இவர் தலைநகர் ப்ராகுக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹாண்ட்லோவா நகரில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார்.

pm robert fico - pm modi

அப்போது இவர் மீது நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 இடங்களை விரும்புவது எதற்காக தெரியுமா..? பட்டியலிட்ட பிரதமர் மோடி!

400 இடங்களை விரும்புவது எதற்காக தெரியுமா..? பட்டியலிட்ட பிரதமர் மோடி!


மோடி கண்டனம்

இந்நிலையில், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “ஸ்லோவாக்கியா பிரதமர் எச்.இ. ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பிரதமர் ஃபிகோ விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். ஸ்லோவாக்கியா குடியரசு மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது” எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.