ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்!
ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளோடு பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறவுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்-வீராங்கனைகளுடன் மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
இந்த கலந்துரையாடலில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் நிசித் ப்ராமனிக்,
சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி
வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இந்திய வீரர்-வீராங்கனைகள் 126 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர்.