இந்த கொலைக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு கிடையாது -கனடா அரசு விளக்கம்!
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது.
நிஜ்ஜார் கொலை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு இந்திய தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா அரசு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது.இதுதொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றி தங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி கனடாவின் பிரபல நாளிதழிலில் ,ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொலை செய்யும் சதித் திட்டம் குறித்து இந்திய பிரதமர்ரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கனடா அரசு
இந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் கனடாவில் நடத்தப்பட்ட கடுமையான குற்றச் செயல்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பு இருக்கிறது என்று கனடா அரசு ஒருபோதும் கூறவில்லை.இது முற்றிலும் தவறானது . இது போன்ற வதந்தியைப் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.