பிரதமர் மோடி இந்த, 2 விஷயங்களை பத்தி மட்டும் பேசமாட்டார்; என்ன தெரியுமா?- ஒவைசி சாடல்
பிரதமர் மோடி , பெட்ரோல், டீசல் விலை உயர்வு. லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு. இந்த இரு விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசமாட்டார். என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி சாடியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்த்தப்பட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.1 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.பெரும்பாலான மாநிலத் தலைநகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐக் கடந்துவிட்டது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் சார்பில் ஹைதராபாத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பேசுகையில், ' பிரதமர் மோடி இரு விஷயங்களைப் பற்றி ஒருபோதும் பேசமாட்டார். என்ன தெரியுமா.
ஒன்று நாட்டில் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும், லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்தும் பிரதமர் மோடி பேசவேமாட்டார்.
சீனா குறித்துப் பேசுவதற்கு பிரதமர் மோடி அஞ்சுகிறார். ஜம்மு காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் பல்வேறு ஆப்ரேஷன்களில் கொல்லப்பட்டனர்.
ஆனால், வரும் 24-ம் தேதி பாகிஸ்தானுடன் இந்திய அணி டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.
காஷ்மீரில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் இந்திய மக்களின் உயிரில் 20-20 விளையாடுகிறது. காஷ்மீரில் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது மத்தியில் பாஜக அரசின் தோல்வியைக் காட்டுகிறது.
பீஹாரில் ஏழை தொழிளர்கள் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கீழ் உள்ள உளவுத்துறை என்ன செய்கிறது. இது மத்திய அரசின் தோல்விஎன ஒவைசி கூறியுள்ளார்.