அமெரிக்காவில் தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

modi meeting us visit
By Fathima Sep 23, 2021 03:07 PM GMT
Report

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து பேசியுள்ளார்.

நான்கு நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு 'குவாட்' அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி,  குவால்காம், அடோப், உள்ளிட்ட முன்னணி தொழில் அதிபர்கள், மற்றும் தொழில் நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் உள்ளிட்டோரை இன்று சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி உடனான குவால்காம் நிறுவனர் கிறிஸ்டியானோ ஆர் அமோன் இந்தியா மேற்கொண்டு வரும் 5 ஜி உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளதாக பிரதமர் அலுவலக டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.