ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாறிய பிரதமர் மோடி : திரிணாமூல் காங் கிண்டல் காரணம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடியினை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி திரிணாமூல் காங்., கிண்டலடித்துள்ளனர், தற்போது அந்த பதிவு வைரலாகிவருகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று ஏழு ஆண்டுகள் முடிந்த நிலையில் ,பாஜ.,வின் முக்கிய உறுப்பினர்கள் கொண்டாடி வருகின்றனர்.அதே சமயம் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 7 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் பிரதமரை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி திரிணாமூல் காங்., கிண்டல் செய்துள்ளது.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிரிட்டனில் இந்த '00' உரிமை பெற்ற ஏழாவது அதிகாரியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜேம்ஸ் பாண்ட் உடன் '007' இணைந்துகொண்டது.இதன்காரணமாகவே ஜேம்ஸ்பாண்ட் பட டைட்டில் களில் 007 என்ற எண் உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்ட மீமில் பிரபல ஜேம்ஸ் பாண்ட் போஸ்டரில் ஜேம்ஸ்பாண்டுக்கு பதிலாக பிரதமர் மோடி நடந்துவருவது போலவும் அவருக்கு கீழ் '007' என்கிற டைட்டிலும் உள்ளது
.இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புதிய விளக்கத்தை அளித்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி பூஜ்ஜியம், பொருளாதார வளர்ச்சி பூஜ்யம் என்று என்பதை சுட்டிக்காட்டும் விதமாக '007' அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.