தாமரை போல நீங்களும் அழிக்க முடியாதவர் பிரதமர் மோடி - நடிகை கங்கனா
தாமரையை போல நீங்களும் அழிக்க முடியாதவர் என பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை கங்கனா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி அழிக்க முடியாதவர் - நடிகை கங்கனா
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், உலகத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பிரபல நடிகை கங்கனா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

"சிறு வயதில் ரயில்வே பிளாட்பாரங்களில் டீ விற்றதிலிருந்து இந்த பூமியின் சக்தி வாய்ந்த மனிதராக மாறியுள்ளது வரை என்ன ஒரு அபாரமான பயணம்.
நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ராமரை போல, கிருஷ்ணரை போல, காந்தியை போல நீங்களும் அளிக்கமுடியாது. உங்களின் பாரம்பரியத்தை எதுவும் அழிக்க முடியாது.
அதனால்தான் உங்களை அவதாரம் என்று அழைக்கிறோம். நீங்கள் எங்கள் தலைவராக இருப்பது பாக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.