நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி புகழாரம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் - வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக 100க்கும் மேற்பட்ட இந்திய வீரர்- வீராங்கனைகள் ஜூலை 17 ஆம் தேதி ஜப்பான் புறப்பட்டு செல்கின்றனர்.
இதனிடையே அனைத்து வீரர்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அப்போது வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியிடம், நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது.
தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளீர்கள். உங்களுடைய பயணம் சிறப்பு வாய்ந்தது என கூறினார்.
தொடர்ந்து பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், இங்குள்ள பயிற்சியாளர், உதவியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நமது வீரர்களுடன் இணைந்து நீங்கள் கடுமையாக உழைத்தீர்கள்.
வீரர்களுக்கு உதவி செய்வதில் இருந்து ஒருபோதும் மத்திய அரசு தவறாது என்று தெரிவித்தார்.