இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
திருச்சி பஞ்சப்பூரில் இன்று மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார்.
இன்று கேரளத்திற்கு செல்லும் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலை விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார்.
சாலை மார்க்கமாக பஞ்சப்பூர் செல்லும் மோடி, மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கூட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
* நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 3,680 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கும் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டல்.
* பிரதான் மந்திரி கிராம சாலை யோஜனா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 89 கிராமப்புற சாலைகளை தொடங்கி வைக்கிறார்.
* கங்கைகொண்ட சோழபுரம் அருகே அமையவுள்ள பசுமை வழிப் புறவழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டல்.
* இரண்டு அம்ரீத் பாரத் விரைவு ரயில் உள்பட 6 ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தல்.
