பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில் ஹைதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்திரங்கிய பிரதமரை திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் ஒன்றிணைந்து வரவேற்கிறார்கள்.
ரயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். இன்று மாலை சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

முன்னதாக விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
பாஜகவைச் சேர்ந்த பிரமுகர்களும் பிரதமரை வரவேற்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழா நடைபெறும் மேடையில் பிரதமர், ஆளுநர், முதலமைச்சரோடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்தியல் ரீதியாக எதிர்க்கருத்துகளை கூறி வரும் நிலையில் பிரதமரை ஒன்றாக வரவேற்று, விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் பாஜக, திமுக, அதிமுக கட்சிகளின் தலைவர்கள்.
பிரதமர் வருகையைத்தொடர்ந்து 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டதுடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சாலை போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.