பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை
Stalin
Modi
CM Meeting
By mohanelango
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
தினசரி கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்தாலும் தினசரி மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் இரண்டாம் அலையில் இருந்து மீண்டு வருவதற்கும் மூன்றாம் அலைக்கு தயாராவதற்கும் பல்வேறு முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இதில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையண்பு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்