PM Modi: 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமர் மோடி !

Tamil nadu Narendra Modi Delhi India
By Jiyath Dec 15, 2023 05:49 AM GMT
Report

இதுவரை 14 நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளதாக மத்திய வெளியிறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பாஜகவை சேர்ந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் நேற்று எழுத்து வாயிலாக அளித்த பதிலில் "கடந்த 2014 முதல் 14 நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

PM Modi: 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமர் மோடி ! | Pm Modi Honoured With National Awards 14 Countries

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதையும் பெற்றுள்ளார்.பிரதமராக பதவியேற்றது முதல், இதுவரை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட், ரஷ்யா, மாலத்தீவு, பஹ்ரைன், அமெரிக்கா, பூட்டான், பிஜி, எகிப்து, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

மக்களவையில் புகை குண்டு வீச்சு - மூளையாக செயல்பட்டவர் போலீசில் சரண்!

மக்களவையில் புகை குண்டு வீச்சு - மூளையாக செயல்பட்டவர் போலீசில் சரண்!

தெளிவான அங்கீகாரம் 

பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது இரு தரப்பு பிராந்திய மற்றும் உலக அளவில் அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அங்கீகாரமாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.      

PM Modi: 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமர் மோடி ! | Pm Modi Honoured With National Awards 14 Countries

மக்களவையில் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.