பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி பேச்சு : முக்கியமாக பேசியது இதை பற்றிதான்

Narendra Modi Rishi Sunak
By Irumporai Oct 29, 2022 05:34 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரிட்டனின் புதிய பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷிசுனக்கை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

ரிஷி சுனக்

பிரிட்டன் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயதேயான ரிஷி சுனக்கை, பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ், முறைப்படி, புதிய பிரதமராக அறிவித்தார்.

இந்த நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள செய்தியில், ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி. பிரிட்டன் பிரதமராக பதவியேற்று கொண்ட அவருக்கு வாழ்த்து கூறினேன். 

 மோடி ரிஷி பேச்சு 

நம்முடைய விரிவான செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவற்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். ஒரு விரிவான மற்றும் சமநிலையிலான சுதந்திர வர்த்தக பேரம் விரைவாக முடிவுக்கு வருவது அவசியம் என இருவரும் ஒப்பு கொண்டோம் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் எனது புதிய பணியை நான் தொடங்கிய தருணத்தில் கனிவான வார்த்தைகளை கூறியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பிரிட்டன் மற்றும் இந்தியா பல விஷயங்களை பரிமாறி கொண்டுள்ளது. வரவுள்ள மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ன சாதிக்க முடியும் என்பது பற்றி அறிவதில் நான் உற்சாகமுடன் உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.