ஜிம்முக்கு சென்ற பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

pmmodi pmmodifitness fitnessvideo modi in gym
By Petchi Avudaiappan Jan 03, 2022 03:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பிரதமர் மோடி ஜிம் ஒன்றில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்களை பயன்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மக்கள் மத்தியில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் ஃபிட் இந்தியா இயக்கத்தை கடந்த 2019 ஆம்  ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின் அவரது உடற்பயிற்சி, யோகா வீடியோக்கள் அவ்வப்போது ட்விட்டரில் வெளியாவது வழக்கம். 

இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மீரட்டின் சர்தானா நகரத்தில் உள்ள சாலவா மற்றும் கைலி ஆகிய இடங்களில் 700 கோடி ரூபாய்க்கு இடையில் இந்த பல்கலைக்கழகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

“ஃபிட் இந்தியா  இயக்கத்தை தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன் முறையாக ஜிம்முக்கு சென்றார். அங்குள்ள உபகரணங்களை அவர் முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.