உலக தலைவர்கள் தரவரிசை - ஜோபைடனை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் மோடி

survey pmmodi top1 globalleaders
By Irumporai Sep 05, 2021 11:02 PM GMT
Report

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மார்னிங் கன்சல்ட் நிறுவனம், உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாராந்திர அடிப்படையில் தலைவர்களை மதிப்பிட்டு வருகிறது.

18 வயதுக்கு மேற்பட்டோரிடம் எடுக்கப்படும் ஆய்வுகள் மூலம் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய 13 நாடுகளின் தலைவர்களுக்கான அங்கீகார மதிப்பீட்டு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது.

இந்தப் பட்டியலில் 70 சதவீத ஆதரவு பெற்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி அவர் முன்னிலையில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் பிற முக்கிய தலைவர்களான ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் (52 சதவீதம்), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (48 சதவீதம்), ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன் (48 சதவீதம்), கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (45 சதவீதம்), இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (41 சதவீதத்துடன் உள்ளனர்.