பொங்கல் பண்டிகை : பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

Thai Pongal
By Irumporai Jan 15, 2023 05:19 AM GMT
Report

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை

பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது,  இன்று தை முதல் நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படைத்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை : பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து | Pm Modi Greetings To Tamilnadu Pongal

பிரதமர் மோடி வாழ்த்து

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்