தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலில் தயாரான ‘பச்சை நிற உடை’ - நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த பிரதமர் மோடி...!

Narendra Modi
By Nandhini Feb 08, 2023 09:31 AM GMT
Report

தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டிலில் தயாரிக்கப்பட்ட ‘பச்சை நிற உடையை இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்து வந்து மாஸ் காட்டியுள்ளார்.

பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட உடை அணிந்து வந்த பிரதமர் 

தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் தயாரிக்கப்பட்ட ‘பச்சை நிற உடை’ பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அணிந்து வந்தார்.

இன்று நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பச்சை நிற உடை அணிந்து வந்தார்.

அவர் அணிந்திருந்த இந்த நீல நிறம் கலந்து பச்ச மறுசுழற்சி செய்யப்பட்ட PET பாட்டில்கள் மற்றும் நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் நடந்த இந்திய எரிசக்தி வார விழாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) இந்த உடை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐஓசி ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நிலையான ஆடைகளை தயாரிக்க 10 கோடிக்கும் அதிகமான PET பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு உடையை அணிந்து கொண்டு, பிரதமர் மோடி இன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்கு வந்தார்.  

pm-modi-green-jacket-recycled-plastic-bottles