இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசு! கவனம் ஈர்க்கும் காணொளி

By Vinoja May 20, 2026 12:42 PM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் கடைசி கட்டமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இத்தாலியின் தலைநகர் ரோமுக்கு வந்தடைந்தார்.

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் இரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இத்தாலி வந்தார் மோடி. மோடியின் ஐந்து நாடு பயணத்தின் இது ஐந்தாவது மற்றும் இறுதி கட்டமாக இத்தாலி பயணம் அமைந்துள்ளது.

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி கொடுத்த பரிசு! கவனம் ஈர்க்கும் காணொளி | Pm Modi Gifts Melody Chocolate To Rome Pm

விமான நிலையத்தில் இந்திய பிரதமரை இத்தாலிய பிரதமர் மெலோனி தனிப்பட்ட முறையில் சென்று வரவேற்றார். இதுக்குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் "Welcome to Rome, my friend!" என்று பதிவிட்டு மோடி உடனான நெருங்கிய நட்பை வெளிப்படுத்தினார் மெலோனி.

மேலும் மோடி சாக்லெட் வழங்கிய தருணத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த இத்தாலி பிரதமர் மெலோனி, “பரிசுக்கு நன்றி,” என்று பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

அந்த காணொளியில் மெலோனி, "பிரதமர் மோடி மிகவும் சிறந்த டாஃபியை (காப்பி மிட்டாய்) பரிசாக கொண்டுவந்துள்ளார்" என்ற சொல்ல, பிரதமர் மோடி உடனே, "Melody" என்பார். உடனே இருவரும் சிரித்து மகிழ்ந்துள்ளனர்.

இதற்கு காரணம் மோடிக்கும், மெலோனிக்கும் இடையேயான நட்புறவை வழக்கமாக இணையத்தில் 'Melodi' என்றே குறிப்பிடுவார்கள். இதன் காரணமாகவே குறித்த காணொளி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.