ரூ 12 கோடியில் பிரதமர் மோடிக்கு புதிய கார் - என்ன ஸ்பெஷல்?

modi mercedesmaybachs650
By Irumporai Dec 28, 2021 06:41 AM GMT
Report

பிரதமர் மோடியின் பயன்பாட்டுக்காக விலையுயர்ந்த புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக கார் வாங்கப்பட்டுள்ளது Mercedes-Maybach S650 Guard 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. ஒரு தயாரிப்பு மாடல் காரில் இருக்கக் கூடிய உயர்ந்த பாதுகாப்பு அம்சம் இதுவாகத்தான் இருக்கும். கடந்த ஆண்டு Mercedes-Maybach S600 Guard ரக கார் இந்தியாவில் 10.5 கோடி ரூபாய் என்ற விலையில் அறிமுகமானது.

எனவே S650 Guard காரின் விலை 12 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Mercedes-Maybach S650 Guard காரில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 516 பிஹெச்பி ஆற்றலையும் 900 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

ரூ 12 கோடியில் பிரதமர் மோடிக்கு புதிய கார் - என்ன ஸ்பெஷல்? | Pm Modi Gets Mercedes Maybach S650

அதே நேரத்தில் இந்த காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இக்காரின் ஜன்னல்கள் ஸ்டீல் கோர் புல்லட்கள் தாக்குதலுக்கும் தாக்குப்பிடிக்கும். வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

ERV என்ற வெடிகுண்டு தாக்குதல் சோதனைக்கான சான்றிதழையும் இக்கார் பெற்றிருக்கிறது. 2 மீட்டர் தொலைவில் 15 கிலோ TNT வெடிகுண்டு தாக்குதல் நடந்தால் கூட இந்தக் காரில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

அதே போல இந்தக் காரின் கேபினில் பிரத்யேக ஆக்சிஜன் சப்ளையும் இடம்பெற்றுள்ளது. கேஸ் தாக்குதல் ஏற்பட்டால் இக்காரின் ஆக்சிஜன் சப்ளை இதில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பை தரும். இந்தக் காரின் எரிபொருள் டேங்க் விஷேச உலோகத்தால் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏதேனும் தாக்குதல்களில் ஏற்படும் ஓட்டைகள் தானாகவே சரிசெய்துகொள்ளும். AH-64 Apache tank attack ஹெலிகாப்டர்களின் பயன்படுத்தப்படும் உலோகத்தில் தான் இந்தக் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் டயர்கள் ஆபத்து நேரங்களில் பாதிப்படைந்தாலும் தொடர்ந்து இயங்கும் தன்மை கொண்டதாகும்.

தனக்கு தேவையான காரை பிரதமர் கேட்டுப்பெறுவதில்லை. அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் தான் நிலைமைக்கு தகுந்தவாறு, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காரை தேர்ந்தெடுக்கிறார்கள்.

அப்படித்தான் இந்த கார் பிரதமரின் கான்வாயில் இணைந்திருக்கிறது. இரண்டு மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 ரக கார்கள் தற்போது பிரதமரின் கான்வாயில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.