தமிழ்நாடு நாளில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்- பிரதமர் மோடி

Tamil nadu Narendra Modi
By Yashini Nov 01, 2026 06:41 AM GMT
Report

Pm modi extends greetings on tamil nadu day- தமிழ்நாடு நாளான இன்று (நவம்பர் 1) பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாள்

முன்னதாக, திமுக ஆட்சியில் ஜூலை 28ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வந்தது.

இந்நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அண்மையில் அறிவித்தது.

அதன்படி, இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாளில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்- பிரதமர் மோடி | Pm Modi Extends Greetings On Tamil Nadu Day

வெளியிட்டுள்ள பதிவு..,

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.

இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும் என தெரிவித்துள்ளார்.