அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இதுதான் - பிரதமர் மோடியின் அடுத்த இலக்கு!

Narendra Modi India
By Jiyath Jan 23, 2024 06:00 AM GMT
Report

அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு தான் எடுத்த முதல் முடிவு என்னவென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இதுதான் - பிரதமர் மோடியின் அடுத்த இலக்கு! | Pm Modi Decision After Return From Ayodhya

பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்நிலையில் அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு தான் எடுத்த முதல் முடிவு என்னவென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "உலகிலுள்ள அனைத்து பக்தர்களும் எப்போதும் ஸ்ரீ ராமரின் ஒளியிலிருந்து ஆற்றல் பெறுகிறார்கள்.

'உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நான்தான்' - ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!

'உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி நான்தான்' - ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!

அடுத்த இலக்கு 

அயோத்தியில் இன்று (ஜனவரி 22) கும்பாபிஷேகத்தின் புனிதமான தருணத்தில், இந்திய மக்கள் தங்கள் வீடுகளின் மேல் சொந்தமாக சோலார் பேனல் அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்ற என்னுடைய தீர்மானம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு இதுதான் - பிரதமர் மோடியின் அடுத்த இலக்கு! | Pm Modi Decision After Return From Ayodhya

அயோத்தியிலிருந்து திரும்பிய பிறகு நான் எடுத்த முதல் முடிவு, ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார அமைப்பை நிறுவும் இலக்குடன் நமது அரசாங்கம் `பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா” திட்டத்தை தொடங்கும் என்பதுதான்.

இதன்மூலம், ஏழை, நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறைவது மட்டுமின்றி, எரிசக்தி துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையும்" என்று பதிவிட்டுள்ளார்.