விருது பெற்ற குடியரசுத்தலைவர்முர்மு - வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி!
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிற்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது வழங்கப்பட்டதற்கு பிரதமர்மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிஜி நாட்டுக்கு சென்ற அவருக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி விருது வழங்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ,இந்த பெருமைவாழ்த்து மிகு கவுரவம் இந்தியாவுக்கும் தைமோர் – லெஸ்டேவுக்கும் இடையே ஆழமாக வேரூன்றியுள்ள உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையை எடுத்துக்காட்டுகிறது.
உயரிய விருது
குடியரசுத்தலைவருக்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது அளிக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்படுவதைப் பார்ப்பது நமக்குப் பெருமையான தருணம். பல ஆண்டுகளாக பொது வாழ்வில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்கான அங்கீகாரமாகவும் இது கருதப்படுகிறது என மோடி தெரிவித்துள்ளார்.