'மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்' - பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து!

Thai Pongal Tamil nadu Narendra Modi
By Jiyath Jan 15, 2024 07:45 AM GMT
Report

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை 

தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

எனவே, பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் வாழ்த்து

அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "அறுவடையை கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும்,

புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.